பாப்பிரெட்டிப்பட்டி அருகேபஸ்சில் இருந்து கீழே விழுந்த சர்க்கரை ஆலை ஊழியர் சாவு
பாப்பிரெட்டிப்பட்டி
தர்மபுரி மாவட்டம் அரூர் திரு.வி.க.நகரை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 60). இவர் கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரை சர்க்கரை ஆலை நிர்வாகம் மீண்டும் பணிபுரிய அழைத்ததால் தினமும் பணிக்கு சென்று வந்தார். நேற்று காலை பணிக்கு செல்வதற்காக அரூரில் இருந்து அவர் தனியார் பஸ்சில் சென்றார். பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஜம்மனஅள்ளி பஸ் நிறுத்தம் பகுதியில் சென்றபோது நாகராஜன் பஸ்சில் இருந்து கீழே இறங்க படிக்கட்டில் நின்றார். அப்போது டிரைவர் திடீரென பிரேக் போட்ட போது நாகராஜன் நிலை தடுமாறி பஸ்சில் இருந்து கீழே விழுந்தார். இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே நாகராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஏ.பள்ளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.