கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.46 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம்

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.46 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம்

Update: 2022-12-24 21:16 GMT

கவுந்தப்பாடி

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.46லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம் போனது.கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.46 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம்

நாட்டு சர்க்கரை

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று நாட்டு சர்க்கரை ஏலம் நடைபெற்றது. இதற்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 3 ஆயிரத்து 630 மூட்டைகளில் நாட்டு சர்க்கரையை விற்பனைக்கு கொண்டுவந்தனர்.

இதில் 60 கிலோ மூட்டைகள் கொண்ட முதல் தர நாட்டு சர்க்கரை குறைந்தபட்ச விலையாக 2 ஆயிரத்து 470 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 2 ஆயிரத்து 490 ரூபாய்க்கும், மீடியம் ரக நாட்டு சர்க்கரை குறைந்தபட்ச விலையாக 2 ஆயிரத்து 350 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 2 ஆயிரத்து 370 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம் 1,897 மூட்டைகள் 1 லட்சத்து 13 ஆயிரத்து 820 கிலோ எடையுள்ள நாட்டு சர்க்கரை 45 லட்சத்து 17 ஆயிரத்து 700 ரூபாய்க்கு விற்பனையானது.

ரூ.46லட்சத்துக்கு விற்பனை

இதேபோல் உருண்டை வெல்லம் 30 கிலோ சிப்பம் பொங்கல் மற்றும் பிரசாதம் தயாரிப்பதற்காக முதல் தரம் ஒரே விலையாக 1,560 ரூபாய்க்கு ஏலம் போனது.

மொத்தம் 50 மூட்டைகளில் உள்ள 1,500 கிலோ எடையுள்ள உருண்டை வெல்லம் 78 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.

நாட்டுச்சர்க்கரை, உருண்டை வெல்லம் மொத்தம் 45 லட்சத்து 95 ஆயிரத்து 700 ரூபாய்க்கு பழனி தண்டாயுதபாணி சாமி கோவில் நிர்வாகம் சார்பாக கொள்முதல் செய்ததாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்