மதுரை-காருக்குள் தூங்கியவர் மூச்சு திணறி சாவு

காருக்குள் தூங்கியவர் மூச்சு திணறி இறந்தார்.

Update: 2023-06-09 19:08 GMT

அவனியாபுரம்

அவனியாபுரத்தை அடுத்த போக்குவரத்து நகரில் வசிப்பவர் பாலு காமு. இவருடைய மகன் உதயகாமு (வயது 34). கார் டிரைவர். இவருடைய மனைவி சரண்யா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வழக்கம்போல் இவர் அருகே உள்ள வலையன்குளம் கருப்பசாமி கோவிலில் தனது காரை நிறுத்திவிட்டு ஏசியை ஆன் செய்துவிட்டு நேற்று முன்தினம் தூங்கி உள்ளார். நேற்று காலை அதிக நேரமாக கார் நின்று கொண்டிருந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் சந்தேகப்பட்டு தூங்குபவரை எழுப்ப முயற்சி செய்தனர். கார் கண்ணாடியை தட்டியும் திறக்கவில்லை. உடனே இது குறித்து பெருங்குடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கார் கதவை உடைத்து பார்த்ததில் காருக்குள் உதயகாமு இறந்து கிடந்தது தெரிய வந்தது. காருக்குள் ஏசி இடையில் நின்று இருக்கலாம். அதனால் மூச்சு திணறி அவர் இறந்து இருக்கலாம். அல்லது வேறு காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்