விவசாயத்துக்கு தேவையான உரங்கள் இருப்பில் உள்ளது என்று கலெக்டர் வினீத் கூறினார்.

விவசாயத்துக்கு தேவையான உரங்கள் இருப்பில் உள்ளது என்று கலெக்டர் வினீத் கூறினார்.

Update: 2023-03-30 15:46 GMT

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் விவசாயத்துக்கு தேவையான உரங்கள் இருப்பில் உள்ளது என்று கலெக்டர் வினீத் கூறினார்.

கூடுதல் மழை

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கி பேசியதாவது:-

மாவட்டத்தில் இயல்பான வருடாந்திர மழை 618.20 மில்லி மீட்டராகும். மார்ச் மாதம் முடிய சராசரியாக பெய்ய வேண்டிய மழை அளவு 27.40 மில்லி மீட்டர். தற்போது வரை 34.52 மில்லி மீட்டர் மழை கிடைத்துள்ளது. இது சராசரி மழை பொழிவை விட 7.12 மில்லி மீட்டர் அதிகமாகும். பயிர் சாகுபடிக்கு தேவையான நெல், பிற பயிறு வகை தானியங்கள் விதைகள் போதிய அளவு இருப்பில் உள்ளது.

நெல் 26.09 டன், சிறுதானிய பயிறுகள் 6.63 டன், பயிறு வகை பயறுகள் 28.10 டன், எண்ணெய் வித்து பயிர் விதைகள் 1.13 டன் இருப்பில் உள்ளது. நெல் சாகுபடிக்கு தேவையான உரங்கள் போதுமான அளவு உள்ளது. யூரியா 1,191 டன், டி.ஏ.பி.1,499 டன், காம்ப்ளக்ஸ் 4,378 டன், சூப்பர் பாஸ்பேட் 620 டன் அளவு இருப்பில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

265 மனுக்கள்

முந்தைய கூட்டத்தில் விவசாயிகள் வழங்கிய மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து துறை ரீதியாக கலெக்டர் விசாரணை நடத்தினார். அனைத்து கோரிக்கைகளையும் காலதாமதமின்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார். மொத்தம் 265 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், இணை இயக்குனர் (வேளாண்மை) மாரியப்பன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சீனிவாசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணவேணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்