கழிவுநீர் கால்வாய் இல்லாமல் அவதி

கழிவுநீர் கால்வாய் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-09-09 19:11 GMT


ஆம்பூர் தாலுகா வடபுதுப்பட்டு கிராமம் ஓணித்தெரு 3-வது வீதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். தெருவில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் தெருவில் ஓடுகிறது. அதேபோல் குழாய்களில் பெண்கள் குடிநீர் பிடிக்கும்போது, அதில் இருந்து வீணாக வெளியேறும் நீரும் தெருவில் ஓடுகிறது. இதனால் தேங்கி நிற்கும் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. குழந்தை தெருவில் விளையாடக்கூட முடியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவில் கழிவுநீர் கால்வாய் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்