தீராத வயிற்று வலியால் அவதி: தூக்குப்போட்டு கொத்தனார் தற்கொலை

தீராத வயிற்று வலியால் அவதியடைந்த கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-03-15 18:30 GMT

ஆலங்குடி அருகே உள்ள கும்மங்குளம் ஏ.டி. காலனியை சேர்ந்தவர் அழகேசன் (வயது 60), கொத்தனார். இவர் கடந்த 4 மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வயிற்றுவலி அதிகமானதால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த அழகேசன் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி சப்-இன்ஸ்பெக்டர் நதியா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்