ஆட்டோ டிரைவர்கள் குடும்பத்துடன் 'திடீர்' போராட்டம்

அஞ்சுகிராமத்தில் ஆட்டோ டிரைவர்கள் குடும்பத்துடன் ‘திடீர்’ போராட்டம்

Update: 2023-02-14 18:45 GMT

அஞ்சுகிராமம், 

அஞ்சுகிராமத்தில் அண்ணா ஆட்டோ தொழிற்சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களுக்கும், மற்றொரு சங்கத்தை சேர்ந்தவர்களுக்கும் இடையே பயணிகளை ஏற்றி செல்வது தொடர்பாக பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் இரண்டு ஆட்டோ சங்கத்தினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடந்தப்பட்டது. இதில் தீர்வு ஏற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலையில் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த தலைவர் கோபாலகிருஷ்ணன், செயலாளர் முருகேசன், பொருளாளர் வீரமணி ஆகியோர் தலைமையில் ஆட்டோ டிரைவர்கள் குடுமபத்துடன் அஞ்சுகிராமம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு சாலையோரம் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, அஞ்சுகிராமம் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் அதிரடிப்படை போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சாந்தி ''அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் வைத்து இன்று (புதன்கிழமை) காலை 10 மணி அளவில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யலாம்'' என்று அறிவுறுத்தினார். அவரின் வேண்டுகோளை ஆட்டோ டிரைவர் மற்றும் குடும்பத்தினர் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்