கல்லூரி மாணவ-மாணவிகள் திடீர் மறியல்

கல்லூரி மாணவ-மாணவிகள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-01-25 20:00 GMT

முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று கல்லூரி முன்புள்ள முசிறி-புலிவலம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, கல்லூரிக்கு குடிநீர் வசதி, கழிவறை வசதி, பஸ் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி கோஷமிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், தாசில்தார் சண்முகபிரியா மற்றும் அதிகாரிகள் மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகள் விரைவில் தீர்த்து வைக்கப்படும் என்று கூறினர். இதைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்