திருவாடானை பகுதியில் திடீர் மழை

திருவாடானை பகுதியில் திடீரென மழை பெய்தது.

Update: 2023-06-29 18:55 GMT

தொண்டி, 

திருவாடானை பகுதியில் கடந்த சில நாட்களாக கொளுத்தும் வெயிலில் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இப்பகுதியில் உள்ள சி.கே.மங்கலம், கல்லூர், அழகமடை, அஞ்சுகோட்டை, மங்களக்குடி, எஸ்.பி.பட்டினம், கிளியூர், சூச்சனி அச்சங்குடி, கடம்பாகுடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் அனல் காற்று குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்