சங்கராபுரத்தில் திடீர் மழை

சங்கராபுரத்தில் திடீர் மழை பெய்தது.;

Update: 2023-09-26 18:45 GMT

சங்கராபுரம், 

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது

இந்த நிலையில் சங்கராபுரம் பகுதியில் நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்தது. மேலும் சாலையில் அனல் காற்றும் வீசியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இந்த நிலையில் மாலை 4 மணியளவில் வானில் கருமேகங்கள் திரண்டன. பின்னர் திடீரென சாரல் மழை பெய்யத் தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக கொட்டியது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. இந்த திடீர் மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதுடன் தாழ்வான பகுதிகளில் தேங்கியது. மேலும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றதை காணமுடிந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்