நொய்யல், குறுக்குச் சாலை, அத்திப்பாளையம், குப்பம், உப்பு பாளையம், புன்னம்சத்திரம், புன்னம், குட்டைக்கடை, மூலிமங்கலம், புது குறுக்குபாளையம், மசக்கவுண்டன் புதூர், காகிதபுரம், பேச்சுப்பாறை, பாலத்துறை, தவிட்டுப்பாளையம், நஞ்சை புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை திடீரென மழை பெய்தது. இதனால் சாலையோர கடைக்காரர்கள் கடும் அவதி அடைந்தனர். கூலி வேலைக்கு சென்று திரும்பிய கூலி தொழிலாளர்கள் நனைந்து கொண்டே சென்றனர். கிராம பகுதிகளில் வாடிய பயிர்கள் பெய்த மழையின் காரணமாக துளிர்விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.