நாகூர் பகுதியில் திடீர் மழை

நாகூர் பகுதிகளில் பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2023-04-27 18:45 GMT

 நாகூர் பகுதியிலும் நேற்று காலை முதல் கடுமையான வெயில் இருந்து வந்தது. இந்த நிலையில் மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் சிறிது நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது. மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு சென்றனர். இந்த மழையின் காரணமாக வெயிலின் தாக்கம் சற்று குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்