கழுகுமலையில் திடீர் மழை

கழுகுமலையில் நேற்று திடீர் மழை பெய்தது.

Update: 2023-10-05 18:45 GMT

கழுகுமலை:

கழுகுமலையில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை முதல் மதியம் வரை வெயில் அடித்தது. மாலை 4 மணியளவில் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. சுமார் 40 நிமிடம் மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்