வாணியம்பாடியில் தண்டவாளத்தில் திடீர் விரிசல் - கோவை, பெங்களூர் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்

வாணியம்பாடி நியூ டவுன் ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டதால் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.;

Update: 2022-08-26 05:49 GMT

ஆம்பூர்,

வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே உள்ள நியூ டவுன் ரெயில்வே கேட் அருகே இன்று காலை தண்டவாளத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டது. இதனை கண்ட ரெயில்வே ஊழியர்கள் உடனடியாக இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைதொடர்ந்து சென்னையில் இருந்து கோவை சென்ற கோவை எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூரு நோக்கி சென்ற பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் மற்றும் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

வாணியம்பாடி ரெயில் நிலைய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு தண்டவாளம் சரி செய்யப்பட்டது. தொடர்ந்து நடுவழிகளில் நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றன.   

Tags:    

மேலும் செய்திகள்