கர்ப்பிணி திடீர் சாவு

கர்ப்பிணி திடீரென உயிரிழந்தார்.

Update: 2023-06-27 20:48 GMT

கர்ப்பிணி

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள வடுகர்பாளையம் மேற்கு தெருவை சேர்ந்தவர் அர்ஜூன். இவரது மகன் அஜித்(வயது 29). கூலித்தொழிலாளி. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அஜித், பெரம்பலூர் பகுதிக்கு வேலைக்கு வந்துள்ளார். அப்போது தன்னுடன் கூலி வேலை செய்த குரும்பலூரை சேர்ந்த பழனிமுத்துவின் மகளான சாந்தியை காதலித்து, கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து குரும்பலூரிலேயே அஜித்-சாந்தி தம்பதியினர் குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் சாந்தி கர்ப்பமானார். தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கடந்த 24-ந் தேதி அதிகாலை சாந்தி ரத்த வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து அவரை அஜித் மற்றும் சாந்தியின் உறவினர்கள் பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

சாவு

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று சாந்தி உயிரிழந்தார். இதுகுறித்து அஜித் பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். அதில், தனது மனைவி சாவில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று சாந்தியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்