கரூர் கருப்பாயி கோவில் தெருவில் திடீர் பள்ளம்
கரூர் கருப்பாயி கோவில் தெருவில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.;
திடீர் பள்ளம்
கரூர் பஸ் நிலையத்தில் இருந்து ஜவகர்பஜார், மார்க்கெட் வழியாக 5 ரோடு செல்லும் சாலையில் கருப்பாயி கோவில் தெரு சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இங்குள்ள சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது.இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
ஜல்லிக் கற்கள் பெயர்ந்தது
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் சற்று தொலைவில் உள்ள கோடீஸ்வரர் கோவில் அருகில் உள்ள சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனையடுத்து அந்த பகுதியில் ஜல்லிக்கற்கள் போட்டு பள்ளம் சரி செய்யப்பட்டது.அதன்மேல் பகுதியில் போடப்பட்டுள்ள ஜல்லிக்கற்கள் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் கற்கள் பெயர்ந்து சாலை முழுவதும் சிதறி கிடக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
கோரிக்கை
தற்போது கருப்பாயி கோவில் தெருவிலும் தார் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு அந்த கருப்பாயி கோவில் தெருவில் தார் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தையும், கோடீஸ்வரர் கோவில் அருகே பெயர்ந்து கிடக்கும் ஜல்லிக்கற்களையும் சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.