இரணியல்-ஆளூர் ரெயில் பாதையில் திடீர் மண் சரிவு

இரணியல்-ஆளூர் தண்டவாள பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவை ரெயில்வே ஊழியர்கள் அகற்றினர்.

Update: 2023-09-29 18:45 GMT

நாகர்கோவில்:

இரணியல்-ஆளூர் தண்டவாள பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவை ரெயில்வே ஊழியர்கள் அகற்றினர்.

மண் சரிவு

குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் இரவு வரை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

இந்தநிலையில் மாலையில் கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில், திருவனந்தபுரம் வழியாக புனலூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆளூரை தாண்டி சென்று கொண்டிருந்தது.

அப்போது அங்குள்ள ஒரு தண்டவாளப்பாதையில் லேசான மண் சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தின் அருகே மண் குவிந்து கிடந்தன. இதை பார்த்த ரெயில் ஓட்டுனர் இதுபற்றி நாகர்கோவில் ரெயில்வே நிலையத்துக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தபடி சென்றார்.

அகற்றும் பணி

உடனே ரெயில்வே போலீசார் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் தண்டவாளத்தின் அருகே ஏற்பட்ட லேசான மண் சாிவை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் ¾ மணி நேரத்திற்கு பிறகு மண் அகற்றும் பணி முழுமையாக முடிந்தது. இந்த மண்சரிவால் ரெயில்கள் தாமதம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்