திருவண்ணாமலையில் தக்காளி விலை திடீர் உயர்வு

திருவண்ணாமலையில் மாண்டஸ் புயல் காரணமாக தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளது.

Update: 2022-12-17 16:55 GMT

திருவண்ணாமலையில் மாண்டஸ் புயல் காரணமாக தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளது.

தக்காளி விலை உயர்வு

திருவண்ணாமலை உழவர் சந்தையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி நேற்று ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கேட்ட போது, திருவண்ணாமலை உழவர் சந்தைக்கு உள்ளூரில் விளையும் தக்காளியும், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் தக்காளி கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படும். 'மாண்டஸ்' புயல் காரணமாக உள்ளூரிலும், ஆந்திரா மாநிலத்திலும் தக்காளி செடிகள் பாதிப்பு அடைந்து உள்ளன. இதனால் பூக்களும், சின்ன, சின்ன பிஞ்சி காய்களும் உதிர்ந்து உள்ளது. அதனால் தக்காளியின் விலை உயர்ந்து உள்ளது. இன்னும் குறைந்தது 10 முதல் 15 நாட்களுக்கு இந்த நிலை நீடிக்கும் அல்லது மேலும் விலை உயரவும் வாய்ப்பு உள்ளது' என்றனர்.

சின்ன வெங்காயம் குறைந்தது

அதேபோல் நேற்றைய நிலவரப்படி உழவர் சந்தையில் (கிலோவில்) உருளைக்கிழங்கு ரூ.40 முதல் 50-க்கும், சின்ன வெங்காயம் ரூ.60 முதல் 80-க்கும், பெரிய வெங்காயம் (பெல்லாரி) ரூ.25 முதல் ரூ.35-க்கும், பூண்டு ரூ.60 முதல் 80-க்கும், பச்சை மிளகாய் ரூ.30 முதல் 36-க்கும், கத்தரிக்காய் ரூ.30 முதல் 60-க்கும், வெண்டைகாய் ரூ.36 முதல் 40-க்கும், முருங்கைகாய் ரூ.150 முதல் 180-க்கும், பீர்க்கங்காய் ரூ.36 முதல் 40-க்கும், சுரைக்காய் ரூ.16 முதல் 20-க்கும், பீனஸ் மற்றும் அவரைக்காய் ரூ.56 முதல் 60-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதில், கடந்த 10 நாட்களில் சின்ன வெங்காயத்தின் விலை சுமார் ரூ.20 குறைந்து உள்ளது. ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்ட முருங்கைகாய் பாதிக்கு, பாதியாக குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்