திடீர் மாரடைப்பு - சாலை வசதி இல்லாததால்.. 1 கி.மீ-க்கு மூதாட்டியை தூக்கி வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்
தர்ப்பணம் கொடுக்க தனது உறவினர்களுடன் மாமல்லபுரம் கடற்கரை வந்த மூதாட்டிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டது.;
மாமல்லபுரம்,
மகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு, 60 வயது மூதாட்டி ஒருவர், தர்ப்பணம் கொடுக்க தனது உறவினர்களுடன் மாமல்லபுரம் வந்துள்ளார். அப்போது கடற்கரையில் மூதாட்டிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டுடது.
உடனடியாக 108 ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்ட நிலையில், கடற்கரைக்கு செல்ல முடியாததால், நுழைவு வாயில் பகுதியிலேயே ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு 700 மீட்டர் தூரம் உள்ள மணற்பரப்பிலேயே, மருத்துவ பணியாளர்கள் மூதாட்டியை தூக்கி வந்து, முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் இனியாவது காலம் தாழ்த்தாமல், மாமல்லபுரம் கடற்கரை பகுதிக்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.