தென்னை நார் கழிவு தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

கரிவலம்வந்தநல்லூர் அருகே தென்னை நார் கழிவு தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2023-04-19 18:45 GMT

சங்கரன்கோவில்:

கரிவலம்வந்தநல்லூர் அருகே ராயகிரி சாலையில் மகாலிங்கம் என்பவர் தென்னை நார் கழிவு தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் சங்கரன்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான எந்திரங்கள் சேதம் தவிர்க்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்