மின்மாற்றியில் திடீர் தீ
ராமநாதபுரத்தில் மின்மாற்றியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
ராமநாதபுரம் நகரின் மையப்பகுதியில் அக்ரகாரம் சாலையில் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெற்றதால் நேற்று மாலை பராமரிப்பு பணிகள் முடிவடைந்து மின்வினியோகம் வழங்கப்பட்டது. அப்போது மேற்கண்ட அக்ரகார பகுதி மின்மாற்றி திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. பெரிய ஜவுளிக்கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஆஸ்பத்திரிகள் உள்ள இந்த பகுதியில் மின்மாற்றி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வழியாக வந்தவர்கள் மின்மாற்றி வெடித்து மின்சாரம் பாய்ந்துவிடுமோ என்று பயந்து அலறி அடித்து ஓடினர். அப்பகுதியினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பட்டப்பகலில் மின்மாற்றி தீப்பிடித்து எரிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.