ஓடும் ஸ்கூட்டரில் திடீர் தீ
ஓடும் ஸ்கூட்டரில் திடீர் தீப்பற்றி எரிந்தது.
மலைக்கோட்டை:
திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே நேற்று மாலை 5 மணி அளவில் ஒரு தம்பதி ஸ்கூட்டரில் வந்தனர். அப்போது திடீரென்று ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனே ஸ்கூட்டரை சாலையிலேயே போட்டுவிட்டு அந்த தம்பதி இறங்கி ஓடி உயிர் தப்பினர். இதைக்கண்ட அந்த பகுதியில் இருந்தவர்கள் குடங்களில் தண்ணீரை கொண்டு வந்து ஊற்றி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.