முள்ளிமலை பொத்தையில் திடீர் தீ

கடையம் அருகே முள்ளிமலை பொத்தையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.;

Update: 2023-03-11 18:45 GMT

கடையம்:

கடையம் அருகே முள்ளிமலை பொத்தையில் மிளா, கரடி, காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்த மலையில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடையம் வனத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீவிபத்தில் பல்வேறு அரியவகை மரம், செடிகள் எரிந்து நாசம் அடைந்தன.

Tags:    

மேலும் செய்திகள்