ஓடும் காரில் திடீர் தீ

ஆம்பூர் அருகே ஓடும் காரில் திடீர் தீ பிடித்து எரிந்தது.;

Update: 2022-06-08 18:33 GMT

ஆம்பூர்

ஆம்பூர் பூந்தோட்டம் பர்ணகார தெரு பகுதியை சேர்ந்தவர் சபியுல்லா (வயது 55). கார் வியாபாரம் செய்து வருகிறார். இந்தநிலையில் தனது காரில் சென்னைக்கு சென்று விட்டு நேற்று அதிகாலை ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். காரை அவரது டிரைவர் ஆம்பூர் புதுமனை ஆயிஷா பீ நகரை சேர்ந்த நவாஸ் (27) என்பவர் ஓட்டினார். ஆம்பூர் அடுத்த கொமேஸ்வரம் அருகே வந்தபோது திடீரென கார் பழுதானது. இதனால் சபியுல்லா அந்த வழியாக வந்த மற்றொரு காரில் வீடு திரும்பினார்.

இதையடுத்து பழுது பார்ப்பதற்காக காரை டிரைவர் நவாஸ் அங்கு வந்த தனது நண்பர் ஒருவருடன் கன்னிகாபுரத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது காரின் முன் பக்கத்திலிருந்து திடீரென புகை வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் காரை நிறுத்தி விட்டு காரில் இருந்து இறங்கினர். அதற்குள் கார் மளமளவென தீப்பற்றி மளமளவென எரிந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். எனினும் கார் முற்றிலும் தீயில் எரிந்து விட்டது. இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்