ஏ.டி.எம்.மையத்தில் திடீர் தீ்; ரூ.55 லட்சம் தப்பியது
மதுரை பை-பாஸ் ரோடு ஏ.டி.எம்.மையத்தில் திடீர் தீ ஏற்பட்டது. இதில் ரூ.55 லட்சம் தப்பியது.
மதுரை பை-பாஸ் ரோடு ஏ.டி.எம்.மையத்தில் திடீர் தீ ஏற்பட்டது. இதில் ரூ.55 லட்சம் தப்பியது.
ஏ.டி.எம்.மையத்தில் திடீர் தீ
மதுரை பை-பாஸ் ரோடு ராம்நகர் சாலையில் ஒரு வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்தில் இருந்து நேற்று காலை 6.20 மணி அளவில் திடீரென்று புகை வந்தது. சிறிது நேரத்தில் அங்கிருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிய தொடங்கின.
அதை கண்ட பொதுமக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் திடீர்நகர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
ரூ.55 லட்சம் தப்பியது
அவர்கள் ஒரு மணி நேரம் போராடி அந்த தீயை அணைத்தனர்.மேலும் ஏ.டி.எம். மையத்தில் இருந்த 4 குளிர்சாதன எந்திரங்கள் மற்றும் சீலிங் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமாகிவிட்டது.மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் விபத்தில் 4 ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த ரூ.55 லட்சம் தப்பியதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.