மின்மாற்றியில் திடீர் தீ விபத்து

மின்மாற்றியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.;

Update: 2023-07-21 18:31 GMT

நொய்யல் அருகே கோம்புப்பாளையம் காவிரி ஆறு அருகே விவசாயிகளின் பயன்பாட்டிற்கு மின்மாற்றி ஒன்று உள்ளது. இந்தநிலையில் நேற்று மின்மாற்றில் உள்ள ஆயில் பெட்டி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம் பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மின்மாற்றியில் எரிந்து கொண்டிருந்த தீயை கெமிக்கல் பவுடர் தெளித்து சுமார் 3 மணி நேரம் போராடி அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்