குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து
குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது
ஒரத்தநாடு பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அருகே கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பை கிடங்கில் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அந்த பகுதியில் புகைமூட்டம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஒரத்தநாடு பேரூராட்சி ஊழியர்கள் விரைந்து சென்று லாரி மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த குப்பை கிடங்கில் அவ்வப்போது தீ விபத்து ஏற்பட்டு வருவதாகவும், அரசு தொழிற்பயிற்சி நிலையம், பள்ளிக்கூடங்கள் இந்தப் பகுதியில் இருப்பதால் மாணவர்கள் சிரமப்பட்டு வருவதாகவும், எனவே இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.