கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே திம்பம்பட்டியை சேர்ந்தவர் டி.கோபால்சாமி (வயது 41). இவர் ஈரோடு மாவட்டம் சத்தி அருகே உள்ள புதுகுய்யனூரில் செயல்படும் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையில் ஏட்டாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு அவருடைய பணியை முடித்துக் கொண்டு படுக்க சென்றார். இந்தநிலையில் நேற்று அதிகாலை அவர் படுக்கையிலேயே இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் சத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்கள். மேலும் வழக்குப்பதிவு செய்து, கோபால்சாமி எப்படி இறந்தார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இறந்த கோபால்சாமிக்கு சண்முகப்பிரியா (38) என்ற மனைவியும், அஸ்மிதா (11) தன்சிகா (8) என்ற 2 மகள்களும் உள்ள னர்.