நாங்குநேரி போலீஸ் ஏட்டு திடீர் சாவு

நாங்குநேரி போலீஸ் ஏட்டு திடீரென்று இறந்தார்.

Update: 2023-07-04 20:12 GMT

நாங்குநேரி:

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 47). இவர் நெல்லை மாவட்டம் நாங்குநேரி போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் நாங்குநேரி கருவூலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அய்யப்பன் உயிரிழந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்