கரூர் வேலுச்சாமிபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 60). மெக்கானிக். இவருக்கு மல்லிகா என்ற மனைவி உள்ளார். இந்தநிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவனும், மனைவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்தநிலையில் ராமசாமிக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்து வந்ததால் உடல் நிலை சரியில்லாமல் போனது. சம்பவத்தன்று தனது மெக்கானிக் கடையில் ராமசாமி படுத்து தூங்கினார்.
பின்னர் வெகுநேரம் ஆகியும் அவர் எழுந்திருக்கவில்லை. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை எழுப்பியும் உடல் அசைவு இல்லாமல் இருந்துள்ளார். இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராமசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.