கட்டிட தொழிலாளி திடீர் சாவு

நெல்லை அருகே கட்டிட தொழிலாளி திடீரென இறந்தார்.

Update: 2023-09-26 19:30 GMT

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சோ்ந்த பிரான்சிஸ் மகன் பிரதாப் (வயது 38). கட்டிட தொழிலாளியான இவர் நெல்லை அருகே முன்னீர்பள்ளம் எம்.எம்.நகரில் தங்கி கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார்.

நேற்று வழக்கம் போல் பணியில் இருந்த போது திடீரென மயங்கி விழுந்து உயிர் இழந்தார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்