மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் திடீர் சாவு
தூத்துக்குடியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் திடீரென இறந்து போனார்.;
கேரளாவை சேர்ந்தவர் சன்னிமோன் (வயது 55). இவர் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்தார். இவர் நேற்று காலையில் யோகா பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடலுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மலர் வளையம் வைத்து உரிய மரியாதையுடன் அஞ்சலி செலுத்தினர்.