நெகமத்தில் ஏ.சி.யை போட்டு காரில் தூங்கிய தனியார் நிறுவன ஊழியர் திடீர் சாவு-போலீஸ் விசாரணை

நெகமத்தில் ஏ.சி.யை போட்டு காரில் தூங்கிய தனியார் நிறுவன ஊழியர் இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறாா்கள்.;

Update: 2023-02-10 18:45 GMT

நெகமம்

நெகமத்தில் ஏ.சி.யை போட்டு காரில் தூங்கிய தனியார் நிறுவன ஊழியர் இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

தனியார் நிறுவன ஊழியர்

கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள கோவில் வீதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 45). கோவை தென்னம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி மைதிலி (43). ரவிக்குமாருக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருந்து உள்ளது. நேற்று முன்தினம் நெகமம் -பல்லடம் ரோட்டில் உள்ள மதுபான கடையில் மதுபாட்டில் வாங்கிவிட்டு, காரில் இருந்தபடி மதுக்குடித்து உள்ளார்.

மூச்சுத்திணறல்

அப்போது காரில் ஏ.சி.ைய போட்டுக் கொண்டதோடு, கார் கண்ணாடியை முழுமையாக அடைத்துக் கொண்டு தூங்கியதாக தெரிகிறது. சிறிது நேரத்தில் கார் ஏ.சியில் இருந்து புகை வந்ததாலும், அளவுக்கு அதிகமாக மதுகுடித்ததாலும் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதில் அவர் அங்கே மயங்கினார்.

நீண்ட நேரமாக கார் அங்கேயே நின்றதால் சந்தேகம் அடைந்து, அந்த வழியாக சென்றவர்கள் இதுபற்றி நெகமம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று, கார் கண்ணாடியை உடைத்து, மயங்கி கிடந்த ரவிக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே ரவிக்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் ஏ.சி.யில் இருந்து வெளியான புகை காரணமாக ரவிக்குமார் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்