திருமணமான 13 நாட்களில் இளம்பெண் திடீர் சாவு

செய்யாறில் திருமணமான 13 நாட்களில் இளம்பெண் திடீர் சாவு

Update: 2022-06-14 16:28 GMT

செய்யாறு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் பல்லவன் தெருவை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் கோகுலகண்ணன் (வயது 30),

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே எரும்பி கிராமத்தைச் சேர்ந்த அசோகன் என்பவரின் மகள் கோமதிக்கும் (26) கடந்த 1-ந் தேதி சோளிங்கரில் திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த கையோடு மறுவீடு சென்ற புதுமண தம்பதி நேற்று செய்யாறில் உள்ள கோகுல்கண்ணன் வீட்டுக்கு வந்தனர்.

நேற்று மதியம் வீட்டில் இருந்த கோமதிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக கோகுலகண்ணனின் தாயார் கோமதியை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ரத்த அழுத்தம் அதிகமாகவும், நாடித்துடிப்பு குறைவாகவும் உள்ளது எனக் கூறி செய்யாறு அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி நேற்று பகல் 1.30 மணியளவில் கோமதி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கோமதியின் தந்தை அசோகன் கொடுத்த புகாரின் பேரில் செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் திருமணமாகி 13 நாட்களே ஆவதால் செய்யாறு உதவி கலெக்டர் வினோத்குமார் விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்