இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை முகாம் அதிகாரி திடீர் சாவு

சிவகங்கை அருகே இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை முகாம் அதிகாரி திடீரென இறந்தார்.

Update: 2023-04-09 18:45 GMT

திருப்புவனம்,

சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே இலுப்பக்குடி கிராமத்தில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை முகாம் உள்ளது.

இந்த முகாமில் கர்நாடக மாநிலம் மிர்ஷபுர் பகுதியை சேர்ந்த சஞ்சீவ்குமார் (வயது 42) என்பவர், ஹவில்தார் பயிற்சி பெற்று வந்தார். இவர் உத்தரபிரதேசத்தில் முகாமில் பணிபுரிந்து வந்த நிலையில், அங்கிருந்து சமீபத்தில்தான் இங்கு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று நள்ளிரவில் சஞ்சீவ்குமார் திடீரென மயங்கி விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு முகாமில் முதல் உதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சஞ்சீவ்குமார் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து இலுப்பக்குடி இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புபடை முகாம் துணை கமாண்டர் ராகுல்சிங் ராணா, பூவந்தி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்