மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் திடீர் வருகை
மூங்கில்துறைப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் திடீர் வருகை சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்து கேட்டறிந்தனர்;
மூங்கில்துறைப்பட்டு
கோவையில் இருந்து துணை கமாண்டர் சிந்து தலைமையில் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் உள்பட மத்திய தொழில் பாதுகாப்புபடை வீரர், வீராங்கனைகள் 20 பேர் கலவர தடுப்பு உபரகணங்களுடன் நேற்று மூங்கில்துறைப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு திடீரென வருகை புரிந்தனர். பின்னா் அவர்கள் அவசர காலங்களில் தங்களின் பணி குறித்து போலீசாரிடம் ஆலோசனை நடத்தினர். மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை கேட்டறிந்த அவர்கள் அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தினர். இதில் மூங்கில்துறைப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பசலைராஜ், ஹரிதாஸ், தனிப்பிரிவு போலீஸ்காரர் சுந்தர் மற்றும் போலீசார் உடன் இருந்தனர். தொடர்ந்து மூங்கில்துறைப்பட்டு பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்ட தொழில் பாதுகாப்பு படையினர் அங்கிருந்து மணலூர்பேட்டைக்கு புறப்பட்டு சென்றனர்.