சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் சுதர்சன ஹோமம்

சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் சுதர்சன ஹோமம் நடைபெற்றது.

Update: 2023-01-20 19:10 GMT

திருச்சி, தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் தை மாத மூல நட்சத்திர வைபவத்தையொட்டி உலக நன்மைக்காகவும், சகல கிரக தோஷ நிவர்த்திக்காகவும் நேற்று காலை சுதர்சன ஹோமம் நடந்தது. அதனைத் தொடர்ந்து கோ பூஜையும், சிறப்பு திருமஞ்சனமும் நடைபெற்றது. பின்னர் மதியம் அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலய பரம்பரை அர்ச்சகர் சுரேஷ் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்