"நேர்மையான வழியை பின்பற்றுபவர்களுக்கு வெற்றியும் பின்னடைவும் சரிசமமே":பொதுக்குழு தீர்ப்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம் மகன் கருத்து

நேர்மையான வழியை பின்பற்றுபவர்களுக்கு வெற்றியும் பின்னடைவும் சரிசமமே என்று அ.தி.மு.க. பொதுக்குழு தீர்ப்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம் மகன் கருத்து பதிவிட்டுள்ளார்.

Update: 2023-03-28 18:45 GMT


அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கில், அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று கோர்ட்டு தீர்ப்பளித்ததோடு, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து, ஓ.பன்னீர்செல்வத்தின் இளையமகன் வி.ப.ஜெயபிரதீப் தனது 'பேஸ்-புக்' மற்றும் 'டுவிட்டர்' சமூக வலைத்தள பக்கங்களில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், 'காலச்சக்கரத்தால் வழங்கப்படும் இறைவனின் தீர்ப்பே இறுதி தீர்ப்பு. நேர்மையான வழியை பின்பற்றுபவர்களுக்கு வெற்றியும் பின்னடைவும் சரிசமமே. போர்படை தலைவனாக பொறுப்பேற்று எதிரியை எதிர்த்து, நெஞ்சை நிமிர்த்தி போரிடும் பொழுது, பின் நின்று முதுகில் குத்தும் துரோக கூட்டத்தை சிறிது கவனித்தும், தன் இனம் தானே என்று அமைதி காத்ததினால் சிறிது தடுமாற்றம் ஏற்பட்டாலும், தலைவன் எழுந்து நின்று திரும்பி பார்த்து துரோகிகளை எதிர்கொள்ளும் போது ஏற்படும் விளைவுகளை எதிர்காலம் அனைவருக்கும் உணர்த்தும். எங்கள் கழக தலைவர்கள் வகுத்துக் கொடுத்த பாதையில் காலச்சக்கரத்தால் வழங்கப்படும் இறைவன் தீர்ப்பு வரும் வரை எங்களது லட்சிய பயணங்கள் தொடரும்' என்று கூறியிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்