நீர்ப்பாசன விவசாயத்தை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியம்

நீர்ப்பாசன விவசாயத்தை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-01 15:33 GMT

நீர்ப்பாசன விவசாயத்தை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ.5 ஆயிரம் மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நவீனமயமாக்கல் திட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதனை அதிகரிக்கும் வகையில் தமிழ்நாடு நீர்ப்பாசன விவசாயம் நவீனமயமாக்கல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரூ.14 லட்சத்து 84 ஆயிரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தாமிரபரணி உபவடிநில பகுதிகளில் 12 எக்டேர் பரப்பில் சொட்டுநீர் பாசனம் அமைக்கப்பட உள்ளது.

விவசாயிகளுக்கு மானியம்

வெண்டை, தர்பூசணி, மிளகாய், கத்தரி போன்ற காய்கறி பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வீதம் 5 எக்டேருக்கு மானியம் வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் ரேஷன் கார்டு நகல், அடங்கல், கணினி சிட்டா, புகைப்படம், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்