மிளகாய் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.3 ஆயிரம் மானியம்

இளையான்குடி பகுதிகளில் மிளகாய் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.3 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளது.

Update: 2023-10-04 18:45 GMT

இளையான்குடி


மிளகாய் சாகுபடி

இளையான்குடி வட்டார பகுதிகளை மிளகாய் மண்டலமாக தமிழ்நாடு அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.3000 வீதம் மானியமாக வழங்கி வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இளையான்குடி வட்டாரத்தில் மிளகாய் சாகுபடி செய்ய 130 எக்டேர் நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மிளகாய் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மிளகாய் நாற்றுகள் மற்றும் இடு பொருட்கள் வழங்கப்படும். மிளகாயை காய வைப்பதற்காக உலர் பாய்கள், பண்ணை குட்டைகள், சொட்டு நீர் பாசன கருவிகள் வழங்கப்படும்.

விவசாயிகள் பயன்பெறலாம்

இத்திட்டத்தில் இணையும் விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பட்டா, அடங்கல், 2-புகைப்படங்கள் ஆகியவற்றுடன் இளையான்குடி வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 86100 32763, 94434 55755) என்ற தொலைபேசி எண்களிலும் அழைத்து பயன்பெறலாம்.

இந்த வாய்ப்பினை மிளகாய் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயன்படுத்தி பலனடையுமாறு தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை மற்றும் மலை பயிர்கள் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்