சிறுதானியம் சாகுபடிக்கு மானியம்வேளாண் அதிகாரி தகவல்

சிறுதானியம் சாகுபடிக்கு ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது என்று வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-18 18:45 GMT


விக்கிரவாண்டி, 

இது தொடர்பாக விக்கிரவாண்டி வட்டார தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ஜெய்சன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விவசாயிகளுக்கு மானியம்

விக்கிரவாண்டி வட்டாரத்தில் உள்ள தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையில் விவசாயிகள் தொகுப்பாக 20 ஹெக்ேடர் பரப்பில் தோட்டக்கலை சிறுதானியம் சாகுபடி, கறவைமாடு உள்ளிட்ட பல்வேறு வேளாண்மை சார்ந்த தொழில்களை ஒருங்கிணைத்து சாகுபடி செய்திட ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் கீழ் ரூ.30 ஆயிரம் மதிப்பில் மானியம் வழங்கப்படுகிறது.

சிறுதானியம் மற்றும் காய்கறிசாகுபடியை ஊக்குவிக்க தமிழக அரசினால் செயல்படுத்தபடும் இத்திட்டத்தில் அனைத்து சிறுகுறு, பெண்கள், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

10 கிராமங்கள் ஒருங்கிணைப்பு

இதில் கலைஞர் ஒருங் கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் 2023-24 நிதியாண்டில் கீழ் தேர்ந்தெடுக்கபட்ட கிராம பஞ்சாயத்துகளான ஆவுடையர் பட்டு, பாப்பனப்பட்டு, ராதாபுரம், கொங்கரம்பூண்டி, பிரம்ம தேசம், முட்டத்துர், தென்பேர், மண்டகபட்டு, குண்டலபுலியூர், நேமூர் ஆகிய 10 கிராமங்களை ஒருங்கிணைத்து தொகுப்பாக இத்திட்டம் செயல்படுத்தபட உள்ளதால் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தில் ஆர்வமுள்ள விவசாயிகள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இத்திட்டம் மற்றும் அனைத்து இதர தோட்டக்கலை சார்ந்த திட்டங்களையும் விவசாயிகள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே தோட்டக்கலைதுறை இணையதளம் www.tnhorticulture.tn.gov.in மற்றும் உழவன் செயலி மூலமும் பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்