ஆவின் பாலகம் அமைக்க மானியம்

திருவாரூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆவின் பாலகம் அமைக்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.;

Update: 2023-05-05 19:00 GMT

திருவாரூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆவின் பாலகம் அமைக்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆவின் பாலகம்

சட்டசபையில் 2022-2023-ம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது, ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினரின் தொழில் முனைவோா் பொருளாதார வளா்ச்சியை ஊக்குவித்திடும் வகையில், ஆவின் பாலகம் அமைக்கும் திட்டத்தை அறிவித்தாா்.

இந்த திட்டத்தில் 50 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்த தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் உறைவிப்பான் (பிரீசர்), குளிர்விப்பான் (சில்லர்) போன்ற உபகரணங்கள் கொள்முதல் செய்து ஆவின் பாலகம் அமைத்து வருவாய் ஈட்டிட தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

திட்டத்தொகை

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்கள் ஆவின் பாலகம் அமைப்பதற்கு வயது வரம்பு 18 முதல் 65 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும். திட்டத்தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2.25 லட்சம் மானியமும் மற்றும் பழங்குடியினர் தனி நபர்களுக்கான திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் மானியமும் அளிக்கப்படும். இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் புகைப்படம் மற்றும் ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை பதிவு செய்ய வேண்டும். மேலும் இதுபற்றிய விவரங்களுக்கு தஞ்சை- நாகை சாலையில் உள்ள மாவட்ட மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்