மானியத்தில் நெல்விதை வினியோகம்
செங்கோட்டையில் மானியத்தில் நெல்விதை வினியோகம்;
செங்கோட்டை:
தமிழக அரசு வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் வேளாண்மை தொடர்பான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தநிலையில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்து அரிசி உற்பத்தியை ஊக்கப்படுத்தும் பொருட்டு பாரம்பரிய ரகமான சீரகச்சம்பா, சிவப்பு கவுனி, தூயமல்லி, கருப்புகவுனி உள்ளிட்ட ரகங்களை 50 சத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
செங்கோட்டை வட்டாரத்தில் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகளை மானியத்தில் வழங்கப்பட்டது. உதவி வேளாண்மை அலுவலர்களின் பரிந்துரையின்படி செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் ஷேக்முகைதீன், வேளாண்மை அலுவலகத்தில் வைத்து விவசாயிகளுக்கு இதை வழங்கி தொடங்கி வைத்தார்.