சுப்பிரமணியசாமி கோவில் தெப்ப உற்சவம் வெள்ளோட்டம்

எட்டுக்குடி சுப்பிரமணியசாமி கோவில் தெப்ப உற்சவம் வெள்ளோட்டம் நடந்தது. எட்டுக்குடி சுப்பிரமணியசாமி கோவில்

Update: 2023-03-15 18:45 GMT

வேளாங்கண்ணி:

எட்டுக்குடி சுப்பிரமணியசாமி கோவில் தெப்ப உற்சவம் வெள்ளோட்டம் நடந்தது.

எட்டுக்குடி சுப்பிரமணியசாமி கோவில்

திருக்குவளை அருகே உள்ள எட்டுக்குடியில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு தைப்பூசத்தன்று தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 40 ஆண்டுகளாக தெப்ப உற்சவம் நடைபெறாமலேயே நின்றுள்ளது. கடந்த 27-ந்தேதி இந்த கோவிலில் குடமுழுக்கு நடைபெற்றது. மண்டல பூஜை பூர்த்தி நாளான இன்று(வியாழக்கிழமை) இரவு 7 மணி அளவில் தெப்ப உற்சவம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தெப்ப உற்சவம் வெள்ளோட்டம்

அதன்படி 40 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள தெப்ப உற்சவத்தையொட்டி 25 அடி நீளமும், 25 அடி அகலத்துடன் பிரம்மாண்டமான முறையில் 150 மிதவைகள் கொண்டு கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு தெப்ப உற்சவம் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ரவிச்சந்திரன், பொது பணித்துறை (கட்டிடம்) உதவி செயற்பொறியாளர் ரஞ்சித், கோவில் செயல்அலுவலர் கவியரசு, ஊராட்சி மன்ற தலைவர் லேகாகாரல் மார்க்ஸ், ஊராட்சி செயலர் ஆரோக்கியமேரி மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்