சுப்பிரமணிய சுவாமி கோவில் நிலங்களை அளவீடு செய்யும்பணி தொடக்கம்

வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் நிலங்களை அளவீடு செய்யும்பணி தொடங்கியது.

Update: 2023-03-17 18:23 GMT

தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறை கோவில்களில் மானிய நிலம் அளவீடு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்பேரில் தமிழக இந்து சமய அறநிலைத்துறை கோவில்களில் உள்ள மானிய நிலங்களை அறநிலையத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான நஞ்சை, புஞ்சை நிலங்கள் மொத்தம் 17.20 ஏக்கரும், மலைப்பகுதி 170 ஏக்கர் நிலப்பரப்பும் உள்ளது.

இதனை இந்து சமய அறநிலைத்துறை நில அளவை தாசில்தார் செல்வி தலைமையில் அளவீடு செய்யும் பணி நேற்று தொடங்கியது. வள்ளிமலைப் பகுதியிலும், கே.வி.குப்பம், வெப்பங்கனேரி பகுதியிலும் உள்ள நிலங்களில் அளவீடு செய்து, ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் விரைவில் நடைபெறும் என அதிகாரிகள் கூறினர்.

அளவீடு செய்யும் பணியில் கோவில் விளை நிலங்கள் சர்வேயர் அருண், செயல் அலுவலர் திருநாவுக்கரசு, எழுத்தர் ராஜ் உள்ளிட்ட இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு நிலங்களை அளவீடு செய்து கற்கள் நடும் பணி நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்