துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம்

துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம்

Update: 2022-09-03 17:08 GMT

பொறையாறு

பொறையாறு அருகே உள்ள திருவிளையாட்டம் கிராமத்தில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.38 லட்சம் செலவில் கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மையத்தின் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு சீர்காழி சப்-கலெக்டர் அர்ச்சனா தலைமை தாங்கினார். வேளாண் உதவி இயக்குனர்கள் தாமஸ் (செம்பனார்கோவில்), வெற்றிவேலன் (குத்தாலம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை இணை இயக்குனர் சேகர் வரவேற்று பேசினார். இதில் பூம்புகார் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்ததுடன் விவசாயிகளுக்கு நெல் ஜெயராமனின் மரபுசார் பாரம்பரிய விதை நெல் மூட்டைகளை வழங்கினார். விழாவில் வேளாண் உதவி அலுவலர் உமா பசுபதி, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அப்துல் மாலிக், அன்பழகன், தொழில் நுட்ப பிரிவு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்க தலைவர் குரு கோபிகணேசன், ஈச்சங்குடி விவசாய நலச்சங்க தலைவர் துரைராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சுகுணா கண்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர் பரிதா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். விழாவில் விவசாயிகளுக்கு மானிய விலையில் நெல் விதைகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்