ரூ 38 லட்சத்தில் துணை வேளாண்மை விரிவாக்கமைய கட்டிடம்
ரிஷிவந்தியத்தில் ரூ.38 லட்சத்தில் துணை வேளாண்மை விரிவாக்கமைய கட்டிடம் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்
ரிஷிவந்தியம்
ரிஷிவந்தியத்தில் துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பெருமாள், வேளாண்மை உதவி இயக்குனர்(பொறுப்பு) ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ரூ.38 லட்சம் மதிப்பில் துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை செய்து கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் வினிதா மகேந்திரன், சுதாதணிகைவேல், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் அண்ணாதுரை, பொதுக்குழு உறுப்பினர் ராஜி, கிளை செயலாளர்கள் செல்வகுமார், சிவமுருகன், கண்ணன் உதவி வேளாண்மை அலுவலர்கள் சேகர், வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.