பேசவிடாமல் தடுத்து மிரட்டியதாக தி.மு.க.வினர் மீது சு.ரவி எம்.எல்.ஏ. புகார்

பேசவிடாமல் தடுத்து மிரட்டியதாக தி.மு.க.வினர் மீது சு.ரவி எம்.எல்.ஏ. புகார் கொடுத்துள்ளார்.

Update: 2022-10-13 18:24 GMT

அரக்கோணத்தை அடுத்த செம்பேடு கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமில் தன்னை பேசவிடாமல் தி.மு.க.வினர் தடுத்து மிரட்டியதாக 8 பேர் மீது அரக்கோணம் தாலுகா போலீசில் சு.ரவி எம்.எல்.ஏ. புகார் அளித்தார்.

அப்போது நகர செயலாளர் பாண்டுரங்கன், கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரகாஷ், நகர கூட்டுறவு வங்கி தலைவர் ஷியாம்குமார் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்