"அரசு பள்ளியில் படிப்பதை மோசம் என நினைக்க கூடாது" - வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்
அரசு பள்ளியில் படிப்பதை மாணவர்கள் மோசம் என நினைக்க கூடாது என்று வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் 'புதியன விரும்பு' என்ற பெயரில் மாணவர்களுக்கான கோடைப் பயிற்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த கோடைப்பயிற்சியில் 20 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்து 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராமச்சந்திரன், தான் அரசுப்பள்ளியில் படித்த மாணவன் தான் என்றும் அரசு பள்ளியில் படிப்பதை மாணவர்கள் மோசம் என நினைக்க கூடாது என்றும் கூறினார்.
மேலும் தொழில் படிப்புகளில் வழங்கப்பட்ட 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் பல ஆயிரம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர் என்றும் கூறினார்.