பச்சைமலை கீழ்கரை ஏரியை சுற்றுலா தலமாக்க ஆய்வு

பச்சைமலை கீழ்கரை ஏரியை சுற்றுலா தலமாக்க ஆய்வு செய்யப்பட்டது.

Update: 2023-05-16 19:06 GMT

உப்பிலியபுரம் ஒன்றியம் தென்புறநாடு ஊராட்சி பச்சைமலையிலுள்ள கீழ்கரை ஏரியை மேம்படுத்த ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. சென்னை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் லட்சுமிபிரியா தலைமையில் அதிகரிகள் ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 3 ஏக்கர் பரப்பளவும் 15 அடி ஆழமுள்ள கீழ்கரை ஏரியை புனரமைக்கவும், சுற்றுலா தலமாக மேம்படுத்தவும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. சுற்றுலா பயணிகளுக்கான நிழற்குடைகள், படகுசவாரி, குழந்தைகள் விளையாடுவதற்கான பூங்காக்கள் மற்றும் விரிவாக்கப்பணிகள் கலந்தாலோசனை செய்யப்பட்டது. அப்போது, உடன் திருச்சி மாவட்ட சுற்றுலாதுறை அலுவலர் ஜெகதீஸ்வரி, திட்ட அலுவலர் தேவநாதன், உப்பிலியபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசேகரன், குணசேகர், தென்புறநாடு ஊராட்சி தலைவர் பானுமதி கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்